கென்ய மக்களின் வாழ்வையும் வலிகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல். இதில் எளிய மக்களின் வாழ்க்கை அந்நாட்டு அரசால் எவ்வாறு சிதைவுண்டது என்று உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. இல்மொராகு என்ற பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்தான் கதையின் நாயகன். நகரமயமாக்கல், வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நிலங்களை அரசு கையகப்படுத்திய பிறகு, வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்கள் சந்தித்த பெருந்துயரம்தான் கதை. கென்யாவில் ஊழலையும் நம்பிக்கை தகர்ப்பையும் பேசிய இந்நாவல் ஆப்பிரிக்காவில் வெளியிடப்பட்டவுடன் பெரும் தாக்கத்தையும் விற்பனையில் சாதனையையும் ஏற்படுத்தியது. தனது நாடகத்திற்காகவும் இரத்தப்பூ இதழ்கள் நாவலுக்காகவும் எந்தவித விசாரணையும் இன்றி கூகி ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Be the first to rate this book.