இக்கதைகள் தமிழவனால் மிகச்சமீபத்தில் எழுதப்பட்டவை. கடந்த ஓராண்டுக்குள் எல்லாக் கதைகளும் உருவாயின. பல தொகுப்புகளாக ஏற்கனவே வந்த அவருடைய முந்தைய கதைகள் தனிமுத்திரையுடன் உள்ளன. அவை தமிழ்ச்சிறுகதைகளில் அதுவரை இல்லாத இலக்கியக் குணங்களைக் கொண்டிருந்தன. இப்போது வரும் இத்தொகுப்பு அவை எல்லாவற்றையும் விட இன்னும் வித்தியாசமானது. இங்கு எழுதமுடியாததைச் சிறுகதையாகத் தமிழவன் தருகிறார் என்று நிச்சயம் சொல்லலாம். பாத்திரங்களும் கதைச்சூழலும் பரிச்சயமானவை போல இருந்தாலும் இக்கதைகள் தாண்டிச்சென்று தொடும் எல்லைகள் நம் மனதை அப்பால் கொண்டுசெல்பவை.
Be the first to rate this book.