சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன்.
அவரின் அறிவியல் துறையிலேயே என்னையும் ஒரு சயண்டிஸ்ட்டாக உருவாக்கினார். இந்த முகவுரை எழுதுவதற்கு என்னை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அறிவியல் சார்ந்து ஒரு காரணமும் இருக்கிறது. அப்பாவின் தூண்டுதலால், பெரியார் பிஞ்சு இதழில் நான் எழுதும் சிறுவர்களுக்கான அறிவியல் கார்ட்டூன் தொடரான ‘ஐன்ஸ் ரூலி’ தொடர்ச்சியாய் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ராஜ்சிவா என்ற ஒருவர் இல்லாவிட்டால் இது சாத்தியமே ஆகியிருக்காது.
ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைத் தமிழ் பேசி எழுதக்கூடிய வகையில் வளர்ப்பதே சிரமம். அதில் ஒருபடி மேலேபோய், தமிழ் அறிவியலை எழுதும் வகையில் என்னை வளர்த்திருக்கிறார்.
இயற்பியலில் அப்பா தொட்டெழுதும் கடினமான குவாண்டம் பிசிக்ஸ், அஸ்ட்ரோ பிசிக்ஸ் என்பவை என்னை பிரமிக்க வைத்திருக்கின்றன. ஸ்ட்ரிங் தியரி, பிகபாங், குவாண்டம் என்பவற்றை இந்தப் புத்தகத்தில் மிக அழகாக, இலகுவாகப் புரியும்படி எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள், நான் கூறியவை எதுவுமே தவறில்லை என்பது புரியும்.
- யாழினி (யாழு சிவா), துபாய்
Be the first to rate this book.