அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல்.
நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப் பற்று மிளிரும் கரிசனத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ் வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இந்தக் கதைகள் அசோகமித்திரனின்புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன.
அவரது எழுத்துக்களின் ஆதார குணங்களான மிகையின்மை, நேர் மொழிக் கதையாடல், சக மனிதப் பரிவு ஆகியவை காணக் கிடைக்கும் இந்தப் புதிய கதைகளில் அவற்றுக்கு இணையாகவே அமைதியின் ரீங்காரத்தையும் உணர முடிகிறது. சொல்லாமல் விடப்பட்ட வார்த்தைகளில் தென்படும் பக்குவமான அமைதி.
Be the first to rate this book.