வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது.
வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள் தென்படுவதில்லை. இவர்களின் துயரங்களைக் கணிப்பதற்கான படைப்பாற்றலை வண்ணநிலவன் கொண்டிருப்பது தமிழ் இலக்கியத்தின் பேறு.
இத்தகைய அரிய மனிதர்களின் வாழ்வை அதே தொனியில் மாற்றும்போது, படைப்பின் வலிமை குன்றிவிடலாகாது. எனினும் அதற்கான கவன ஈர்ப்பை மனத்தில் கொள்ளாது இயல்பாகத் தன்னை மேலெழுப்பிக்கொள்வதில்தான் வண்ணநிலவனின் படைப்பாற்றல் ஒளிர்வதாக உணர்கிறேன்.
மேலே கூறப்பட்டவற்றிற்குச் சான்றுபகரும் கதைகளே இவை.
- களந்தை பீர்முகம்மது
Be the first to rate this book.