கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. மேடைகளில், கவியரங்குகளில், வானொலியில், தொலைக்காட்சிகளில் அடிக்கடி அவரது கவிக் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. என் தலைமையில் நடைபெறும் கவியரங்குகள் எதுவும்அப்துல் ரகுமான் பங்கு பெறாமல் நடந்ததில்லை, சொற்சித்திரங்கள் அற்புதமாக வரையக் கூடியவர், வார்த்தைகளின் சித்து விளையாட்டு என்பதுஅவர் கடுந்தவம் இயற்றாமலே தமிழன்னை அவருக்கு வழங்கியுள்ள வரம், கவியரங்குகளில் அவர் கம்பீரமாக நின்றுகொண்டு கள முரசு முழங்குவது போலவும். மங்கல முரசு ஆர்த்திடுவது போலவும். கவிதை மணியாரம் கோத்திடும்போது அவையின் ஆரவாரம் அலை கடலாகும்.
Be the first to rate this book.