ஈழ யுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார். துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை.
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
இச்சிறுகதைத் தொகுதி ஈழ யுத்தக் காலத்தையும் அதற்குப் பிறகான கொடுங்காலத்தையும் போராளிகள் பக்கம் நின்று. நுட்பமுடனும் மிகுந்த வீரியமுடனும் பேசுகின்றன. போராளிகள் என்பவர்கள் தியாகிகள். தாய் மண்ணின் விடுதலைக்கு வித்தாக மரித்தவர்கள். விடுதலை பெறும் தேசத்துக்கு உயிர் கொடுத்தவர்கள். யுகம் யுகமாகப் பேசப்படப் போகிறவர்கள். அந்நிரந்தர புகழுக்கு வாத்தைகள் வழங்குகிறவை, ஒரு வரலாற்றை புனைவாக தந்திருப்பவை அகரமுதல்வனின் கதைகள்.
Be the first to rate this book.