இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக் கிடக்கின்றன.
ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக்கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்.
- முன்னுரையில் ரவிக்குமார்
Be the first to rate this book.