ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்பு தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரத கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபட்டுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம்.
Be the first to rate this book.