இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூழலில் கடவுள் பற்றிய கருத்தாக்கம், வழிபாடு மற்றும் பிரார்த்தனையால் இறையியலுக்கு விடுக்கப்படும் சவால், பாவம் மற்றும் தீமை பற்றிய பிரச்னை உள்ளிட்ட மதநம்பிக்கையின் உள்ளுறைந்த கொள்கைகளில் வாசகனைக் கவனம் கொள்ளச் செய்கிறது.
இறையியலில் அறிவு, ஞானம், அனுபவத்தின் இயல்பு ஆகியவற்றைச் சோதிக்கும் இவர், இன்று இறையியல் பிரதிகளை விளக்குவதில் சம்பந்தப்பட்டிருப்பது என்ன என்பதையும் விவாதிக்கிறார்.
Be the first to rate this book.