பொதுவாகவே அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் படிப்பினைக்காகவும் வழிகாட்டுதலுக்காகவுமே கூறப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களை மட்டுமே முன்னிறுத்தி நிகழ்காலத்தில் நாம் காண்கின்ற சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் எனும் முடிவினை நாமே தீர்மானித்துக் கொள்வதற்கான முடிச்சுகளை அவை வழங்குகின்றன. யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம் மற்றும் அவர்களுடைய சகோதரர்களுடைய இந்த வரலாறு மற்ற எல்லா வரலாறுகளைக் காட்டிலும் அண்ணல் முஹம்மது ஸல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய வாழ்வோடு எல்லா வகையிலும் தொடர்புடையதாக இருக்கின்றது.
Be the first to rate this book.