"இறைவன் இருக்கிறான்?" என்னும் இந்நூல் முதன்முதலாக 1966ஆம் ஆண்டு உருது மொழியில் "மஸ்ஹப் அவ்ர் ஜதீத் சேலன்ஜ்" (மார்க்கமும் நவீன சவால்களும்) எனும் பெயரில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்நூல் அரபி மொழியில் "அல் இஸ்லாமு யதஹத்தா" (இஸ்லாம் சவால் விடுக்கிறது) என்னும் பெயரிலும் ஆங்கிலத்தில் "God Arises" (இறைவன் எழுகிறான்) என்னும் பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டது உலகெங்கும் பரவியது. இந்நூல் உலகின் பல்வேறு இஸ்லாமிய கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, மலையாளம் எனப் பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்நூல் பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையும் அறிவியலும் இறைவனின் இருத்தலுக்கு எவ்வாறு சான்றாக இருக்கின்றன என்பதை இந்நூல் அறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியிலும் நிறுவுகிறது.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியரான முதுபெரும் அறிஞர் மவ்லானா வஹீதுத்தீன் அவர்களின் ஒப்பற்ற இந்நூல் பிற மொழிகளில் முத்திரை பதித்ததைப் போலவே தமிழிலும் முத்திரை பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.