இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்களின் நிலைமை, அன்னவர்களது தூதுத்துவக் காலத்தின் பின்னர் பெண்கள் பெற்றுக்கொண்ட கௌரவமான அந்தஸ்து, ஈட்டிக்கொண்ட விடுதலை ஆகியனவற்றை வெளிக்கொண்டுவரும் நூல் இது.
அகிலத்தின் வரலாற்றில் அதி உன்னதத்துவம் வாய்க்கப்பெற்ற அந்த இருபத்தி மூன்று ஆண்டு காலத்தின் அற்புதமான சாதனைகளுக்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே பங்காற்றியுள்ளனர். வரலாற்றின் போக்கையே திசை திருப்பிவிட்ட அந்தச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் சமூகத்தின் பாதியினரான பெண்களின் பங்களிப்பு எவ்வகையிலும் குறைந்ததல்ல.
அதற்கெல்லாம் காலாக அமைந்தது, பெண்களை அடக்கியாள்வதற்காய் இடப்பட்டிருந்த தளைகளெல்லாவற்றையும் அறுத்தெறிந்து, அவர்களுக்குப் பூரணமான விடுதலையை அளிக்கும் பாரிய பணியை இஸ்லாம் ஆற்றியதுதான்.
பெண்களைப் பொறுத்து நாம் பிரத்தியட்சமாகக் கண்டு கொண்டிருக்கும் நிலைமைதான் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் காணக் கிடைத்ததா? அல்லது, சமகால யதார்த்தங்களுக்கு மாறுபட்ட ஒரு சூழலில்தான் பெண்கள் அப்போது வாழ்ந்து வந்தார்களா?
சத்தியத்தைத் தேடும் பணியில் தன்னை முற்று முழுதாய் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சிந்தனையாளரது அயராத உழைப்பின் பயனாய் வெளிவந்தது இந்த நூல். தெளிவான சிந்தனையாளரான அப்த் அல் ஹலீம் அபூ ஷக்கா, தனது ஆய்வுகளில் முழுமையாகவே தன்னை ஆழ்த்திக் கொள்பவர். அவர் கூறுவார், "உன்னை நீ மொத்தமாய் கொடுத்தால்தான் அறிவு என்பது தன்னில் ஒரு பகுதியையேனும் உனக்குத் தரும்."
Be the first to rate this book.