பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும் வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்தாலும் இருதயமெல்லாம் திகைக்கத் தொடங்கிவிடுகிறது அவர்களுக்கு. பறக்க விழையும் ஆன்மாவின் சாயலாகவே ஒவ்வொரு பறவையையும் காண்கிறார்கள். அவர்கள் பாடும் கவிதைகளை அவை பொருட்படுத்துவதேயில்லை. எனினும் வலுக்கட்டாயமாக அவற்றின் சிறகுகளுக்கு வலிக்கா வண்ணம் கவிதையைக் கட்டி முடிச்சிடுகிறார்கள். ஒருமுறை பறவையுடன் இணைந்து விட்ட கவிதை சதாகாலங்களிலும், வாசிக்கும் தோறும் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் பறவையும் கவிதையும் நித்தியமாகி விடுகின்றன. பறவைகளையும், கவிதைகளையும் ஒன்றாகப் பறக்க விடும் வானத்தின் திருவிழாவே இந்த இறகிசைப் பிரவாகம்.
Be the first to rate this book.