சமயவேலின் கவிதைகள் ஆழ்ந்த அனுபவத்தின், வாசிப்பின் தீற்றல்களாக வடிவம் பெருகின்றன. இத்தொகுப்பில் நல்லசெய்தி என்னவென்றால் கவிதை புத்தகங்களை வாங்க விடாமல் செய்யும் அறிவுஜீவிகளின் அசந்தர்ப்ப மொழிநடையில் முன்னுரை இல்லை. எளிமையான முன்னுரை இவருடையது தான். வித்தியாசமான பார்வை, அதற்கேற்றார் போல் வந்து விழும் வார்த்தைகளின் சுகானுபவம். கருஞ்சிட்டுக்கும் கருப்புசேலைக்கும் என்ன தொடர்பு என்பது போல் தத்துவார்த்தத்திற்கும், ஆசை கொண்ட மனத்திற்கும் இடையில் நடப்பதைப் போல பலவரிகள் பலகவிதைகளில். இவரது மற்ற மொழிபெயர்ப்பு கவிதைகளையும் தேடி படியுங்கள்.
Be the first to rate this book.