பதின்மூன்று கதைகளும் ஆதரவற்ற குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் நலன், ஒடுக்குமுறைகளுக்குள்ளான பெண்களின் வாழ்வு, சமூகத்தின் உறவு, உழைப்பின் மேன்மை என்றும் பெரியார் வழியில் பகுத்தறிவு புகட்டல், மூட நம்பிக்கை அகற்றல் என்றும் கருத்தாங்கி நிற்கின்றன. மறந்துங்கூடச் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதங்களை அல்லது ஊழல் நுருவாகம், அரசியல் மோசடிகளைக் கதைகளாக நினைக்காதது வியப்பைத் தருகிறது. விந்தியகௌரி தனிமனித மனங்களை குடும்ப உறவுகளைத் தாண்டி வெளிவராத கதைக் களத்தைக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.