சுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு இந்நூல்.
தனது முந்தைய ஐந்து தொகுப்புகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வீச்சுடன் முன்னேறிச் சென்றிருக்கும் சுகிர்தராணி ‘இப்படிக்கு ஏவா’ளில் உச்சத்தை எட்டியிருக்கிறார். அதைவிடவும் அதிஉச்சத்தை எட்டும் கவிதைகள் வரக்கூடும் என்ற நன்னம்பிக்கையையும் இந்தத் தொகுப்பு முன்னறிவிக்கிறது.
மையப் பொருளிலும் சொல்லும் மொழியிலும் பார்க்கும் கோணத்திலும் வித்தியாசத்தையும் செறிவையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு இது.
காதலின் மென்மையையும் காமத்தின் வன்மையையும் தாய்மையின் கசிவையும் தந்தைமையின் நெகிழ்வையும் மகளின் ஆதுரத்தையும் தோழமையின் இணக்கத்தையும் பகை முடிக்கும் சீற்றத்தையும் போராளியின் முழக்கத்தையும் செயல்பாட்டாளியின் கருணையையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. உணர்வின் தீர்க்கமும் அறிவின் மின்னலும் இந்தக் கவிதைகளில் இரண்டறக் கலந்திருக்கின்றன.
Be the first to rate this book.