பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன். வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்து எதிரே அமர்ந்திருக்கும் காட்சி எந்தப் பேராசிரியருக்கும் எந்த நாட்டிலும் அமைத்திருக்காது. ஒரு மனக்கண்ணில் விரிந்தது. "எனது மாமியராக,மாணவியாக என்று இரு நிலைகளிலும் தாங்கள் பயணித்தீர்கள் என்றாலும் இரண்டையும் இணைக்கும் அடிச்சரடாக இருந்தது... நீங்கள் எனக்குத் 'தோழர்' என்பதுதான்" என்கிற பார்த்திபராஜாவின் பதில் கடித்த்தின் இறுதி வரிகள்தாம் இந்நாடகத்தின் கிளைமாக்ஸ் ஆகி நிற்கிறது.
-ச. தமிழ்செல்வன்
Be the first to rate this book.