சிக்கலான பிரச்சினைகளுள் சுவையான சுடான பிரச்சினை ஒன்றை வைத்து, இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அப்பிரச்சினை எது? ஆண் - பெண் உறவு முறையாகும். வைதீகக் குடும்பத்தில் பிறந்த பெண்ணொருத்தி, தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் குடும்பத்தார் அனைவரையும் பகைவர்களாய்க் கருதி, வீட்டை விட்டு வெளியேறி, பல பயங்கர அனுபவங்களுக்கு உள்ளாகிறாள். அவளுக்கு ஏன் அந்நிலை ஏற்பட்டது? அவள் பிறந்தது என்னவோ வைதீகக் குடும்பத்தில்தான்; ஆனால் அவள் வளர்ததோ மேலை நாட்டு நாகரிகத்தின் பாதிப்பால் மாற்றமடைந்துள்ள சமுதாயத்தில் இவ்வாறு வீடும் வெளியும் வெவ்வேறு தன்மை கொண்டு இயங்கும் சமுதாயத்தில் வளரும் ஒரு இளம்பெண்ணின் நிலை, அவளின் ஆசைகள், வெளிப்பாடுகள், அவள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் முதலியவற்றைக்களனாய்க்கொண்டு, எவரும் விரும்பிப் படிக்கும் எளிய நடையில் எழுதி 'லவ் பேர்ட்ஸை' தமிழ் வானில் பறக்கவிட்டிருக்கிறார்.
Be the first to rate this book.