நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இருவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் வெகுவாக ரசிக்கப்படுவதற்கு இணையாகவே எழுத்தாளர்களாலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டவை. சுவாரசியமான எழுத்தாகவும் அசலான முன் உதாரணங்களாகவும் கருதத் தகுந்த நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்த நூல். வாசிக்க வாசிக்க விரியும் நுட்பத்தாலும் மானுடச் சிக்கலின் பின்னலாலும் முக்கியத்துவம் பெறுகின்றன இந்த நான்கு படைப்புகளும்.
Be the first to rate this book.