பத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வாசித்துவிட்டு, எழுதுவதற்கும் ஊடையில் அவருடைய மொழியும், மனிதர்களும், கதைசொல்லல் விதங்களும், மாறாத அதே குறுகுறுப்போடு இருக்கிறார்கள்.
அசலான தேனியின் ஜாடையில் முகம் மாறாமல் பிறந்த பிள்ளைகள் மாதிரி தன் எழுத்துக்குள் அவர் உலவவிடுகிற கதாபாத்திரங்கள் அந்தந்த மனிதர்களின் வாய்ச் சத்தத்தையும் உடலசைவையும் சேர்த்துக்கொண்டே நடமாடுகிறார்கள். அவ்வளவுக்கு சுத்தமாக கதைசொல்லத் தெரிந்த வித்தைக்காரர் காமுத்துரை.
- கார்த்திக் புகழேந்தி
Be the first to rate this book.