மனித வாழ்வுத் தருணங்களை மிக நுட்பமாக அணுகியிருக்கின்றன இக்கதைகள். தனிமனித வாழ்வை மையப்படுத்தி அதன் அகவோட்டத்தின் நுண்ணுணர்வுகள் மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கின்றன. புறச்சூழலின் தாக்கத்தின் விளைவாக அகம் கொள்ளும் ஆற்றாமை, கொடுந்துயர், சஞ்சரிப்புகளை இக்காதாப்பாத்திரங்களின் வழியே காண நேர்கிறது. வாழ்வின் பெரும்பகுதித் துயரிலிருந்து மீச்சிறு தருணம் அவர்களை மீட்டெடுக்கிறது. மனித மனம் தேடும் மெல்லிய கதகதப்பினை படிக்கிற வாசகனுக்கும் கடத்தும் செறிவான கதைகள் இவை.
Be the first to rate this book.