விமர்சனக்குரலை முன்வைப்போரை எல்லாம் சிறையில் அடைத்துத்தள்ளும் இன்றைய இருண்டகால இந்தியாவின் உண்மை நிலையை வலுவாகப் பேசும் மிகமுக்கியமான ஆவணம் இந்நூல்."
- அல்பா ஷா. எழுத்தாளர்
"இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது இதுவரை இதுவரை எங்கேயும் நாம் கேட்டிராத அரசியல் கைதிகளின் குரல்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுடைய நிலையை மையப்படுத்தி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதன்மூலம், அரசை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகளாக்கி இந்த மோடி அரசு, சிறைக்குள்ளும் எப்படியாக அடைத்துவைக்கிறது என்பதையும் இந்நூல் நமக்குத் தெளிவாக விளக்குகிறது."
- கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
"இந்தியாவின் அன்பும் அறிவுமிக்க மிகச்சிறந்த மனிதர்கள் சிலரின் கனவுகளைப் பார்த்தே அஞ்சி, உயரமான சிறைச் சுவர்களுக்கு அப்பால் அவர்களை அடைத்துவைத்திருக்கிறது இந்திய அரசு. அதுகுறித்துத் தைரியமாகவும் இன்றைய தேவையாகவும் ஓர் ஆவணமாக எழுதப்பட்டு நம் கைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது இந்நூல், ஆன்மாவை உலுக்கியெடுக்கும் அநீதிகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் இலட்சியவாதிகளின் வலிமிகுந்த பயணத்திற்கான சாட்சியாக இருக்கிறது இந்நூல்."
- ஹர்ஷ் மந்தர், எழுத்தாளர், மனித உரிமை மற்றும் அமைதிக்கான செயல்பாட்டாளர்
Be the first to rate this book.