இன்றைய தமிழ் விமர்சகர்களில் ஒளிமிக்க பார்வைகளை முன்வைப்பவராக நான் கணிக்கும் எஸ்.சண்முகம், மா.அரங்கநாதனுடன் நடத்தும் உரையாடல் பெரும்பாலும் இன்மை என்ற கருத்தாக்கத்தின் வழி நடைபெறுகிறது. நான் அரசியல் வழி மா.அரங்கநாதனைப் பார்ப்பதற்கும் சண்முகம் பார்வைக்கும் மாறுபாடு இல்லை. இந்த இன்மைதான் மா.அரங்கநாதனையும் சங்க இலக்கியத்தையும் இணைக்கிறதென்கிறார் சண்முகம். ஸான் பிரான்ஸிஸ்கோவிலிருந்த ஒருவன் தாய் வாழ்ந்த இடத்தைப் பார்க்க வருவதுதான் மா.அரங்கநாதனின் அடிப்படைத் தத்துவம். அவரது தாய் வாழ்ந்த குமரி மாவட்டம்தான் மா.அரங்கநாதனின் “இன்மை” சைவசித்தாந்தம் சொல்கிறது. இலதென்றலின் உளது. இலக்கியம் புதிய மொழித்தளத்தில் செயல்படுகிறது. இலக்கியம் மெளனமான உரையாடல்.
- தமிழவன்
Be the first to rate this book.