மரங்களையும் சுவர்களையும் தளங்களையும் ஓடிவிளையாடிக் கொஞ்சித் தழுவிக்கொண்டிருந்த அணில்களையும், மண்ணில் ஊன்றிய ஒற்றைக் கால்களால் உறுதியாக நின்றபடி நாற்றிசையும் நாற்பது கைகளால் காற்றையும் வெளியையும் துழாவியபடி கொடுத்தபடியும் போதித்தபடியுமாய் நிற்கும் தென்னைகளையும் ‘பிள்ளைகள்’ என்று சொன்னவர்கள் நாம். உயிர்களுக்கு மட்டுமின்றி தாவர இயற்கைக்குமே அன்னை/தந்தை ஆனவர்கள் ! இந்நிலையிலிருந்து எப்படி, எவ்வாறுகளால் தவறியவர்களாய் வாழ்வை குழப்பங்களும் போர்களும் துயர்களுமாக்கியிருக்கிறோம் என்பதை சுட்டிக்கொண்டே இருக்கிறார்... கவிதையின் மதம் கண்டுகொண்ட தேவதேவன்
Be the first to rate this book.