பொருளில் இருந்துதான் சிந்தனை பிறக்கிறது என்கிறார் மார்க்ஸ். பொருளை காணும் போது உருவாகும் சிந்தனை பிறகு விரிவடைகிறது; வளர்கிறது. நாம் வாழும் சமகால சமூக அமைப்பில் நமக்குள் உருவாக்கும் பொதுப்புத்தியானது (Commonsense) பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளையொட்டியே அமையும்.
ஒருவரிடம் இருக்கும் பொதுப்புத்தி என்பது வெறுமனே பொது அறிவாக மட்டுமல்லாமல் நல்லறிவாக (Goodness) இருப்பதும், பகுத்தறிவாக (Rational) வளர்வதும் சமூக முன்னேற்றத்திற்கு உதவிடும். நமக்குள் உருவாக்கியிருக்கும் படிமத்தை சற்று கலைத்துப் போட்டு, ஒரு புதிய பார்வையை, மாற்றுக் கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் புதிய சிந்தனைகள் உருவாகாது.
Be the first to rate this book.