சட்டப் பேரவை, மேலவைப் பணிகளின் மூலம் கலைஞர், எம்.ஜி.ஆர், திரு ஜி.கே.மூப்பனார், திரு எம்.கல்யாணசுந்தரம், திரு ப.மாணிக்கம் போன்றோரின் அன்பையும் வாழ்த்துகளையும் இளமையிலேயே பெற்றுத் திகழ்ந்த 'சட்டப்பேரவையாளர்' என்னும் சிறப்பினைப் பெற்றவர் திரு க.சுப்பு. எழுதுவதுபோலவே, பொது மேடைகளில் பேசுவதிலும் இவர் வல்லவர். வழக்கறிஞரான இவரது விவாதங்களில் சட்டத்துறை ஞானமும், சூடும், சுவையும், எள்ளலும், நையாண்டியும் இயல்பாகவே இழையோடும். இந்தத் தொடர் முந்தைய ஆள்வோரின் அச்சுறுத்தலையும் மீறி வெளிவந்த காரணத்தால் 'நக்கீரன்' தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. கடைகள் சூரையாடப்பட்டன. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். இதையும் மீறித்தான் இந்த 'இங்கே ஒரு ஹிட்லர்' உங்கள் கரங்களில் தவழ்கிறது, நூலாக...
Be the first to rate this book.