தனது 50 ஆண்டுகாலத் தமிழாசிரியப் பணி வாழ்வில் தனக்கு வாய்க்கப்பெற்ற தருணத்தில் எல்லாம் இந்நூலாசிரியர் எவ்வாறு தமிழுக்குச் செழுமை சேர்த்திருக்கிறார் என்பதை இந்நூலை முழுமையாகப் படிக்கிறபோது தெரிந்துகொள்ள முடிகிறது.
இது வாழ்க்கை வரலாறு அல்ல; மாணவர்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், அறிவுசால் படைப்புகளிலும் மொழியை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை சொல்லும் மொழி வரலாறு என்றே எடுத்துக்கொள்ளலாம். இதை படிக்கும் நமக்குள்ளும் மொழியறிவை ஊட்டுகிறார். சின்னச் சின்ன சொற்றொடர்களை எவ்வாறு எழுதுவது? பிழையின்றி எவ்வாறு தமிழை எழுதுவது? நல்ல படைப்பாளி என்று நாம் அறிந்து வைத்துள்ள சிலர் கூட மொழி என்று வருகிறபோது எங்கெல்லாம் சரிந்து விழுகின்றனர் என்பதையெல்லாம் நுட்பமாக சொல்லியிருக்கிறார்.
இன்று ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுபவர்கள் குறைவு. ஞானச்செல்வன் அவர்கள் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல ஒற்று பிழையின்றி எழுத வழி சொல்கிறார். இவரது வாழ்க்கையின் நிகழ்வுகளின் வழியாக இவர் சொல்லியிருக்கிற செய்திகளில் தமிழின் சரித்திரமும் நமக்குப் புலப்படுகிறது.
- மானா
Be the first to rate this book.