தினம் தினம் என்னைக் கிழிக்கிறீர்களே! நீங்கள் இன்று என்ன கிழிக்கப் போகிறீர்கள் என்று தினசரிக் காலண்டர் நம்மைப் பார்த்துக் கேட்கிறது. இப்படி நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.
பரீட்சையில் பிட் அடித்துக் கொண்டிருந்த ஒரு பையனைப் பேப்பருக்குக் கீழே என்ன வைத்திருக்கிறே என்று அதட்டினார் ஆசிரியர். சார் உங்கள் பணி என்ன? என்று கேட்டான் அந்த மாணவன். மேற்பார்வையாளர் என்றார் அவர். அப்படியானால் மேலேயே பார்வையிடுங்கள். ஏன் கீழே பார்வையிடுகிறீர்கள் என்றான் பையன்.
மிகவும் கடுமையான செய்திகளைக்கூட எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் இப்படி நகைச்சுவை கலந்து சொல்வது ஆசிரியரின் பாணி.
Be the first to rate this book.