அசோகமித்திரனின் இன்று , எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து இன்று வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம். இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான். இன்றைய நவீன தமிழ் நாவல்கள் அனைத்துக்கும் இதுவே முன்னோடி.
Be the first to rate this book.