ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது.
Be the first to rate this book.