ஜெயமோகன் இடதுசாரிகளை – கம்யூனிஸ்டுகளை நகையாடுகிறார். திராவிட இயக்கத்தை ஏளனம் செய்கிறார். பெரியார் அம்பேத்கரை சாடுகிறார். பின் மயிலிறகால் நீவுகிறார். காந்தியைச் சார்ந்து எழுவதுபோல எழுதி ஆதரிப்பதாய்க் காட்டி மராமரத்தின் பின் ஒளிந்திருந்து தாக்கும் கலையை ஜெயமோகன் நன்றாகப் பயின்று இருக்கிறார். கபாலிகர்கள் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து பயமுறுத்துவதுபோல நூல்களை எல்லாம் நற்சான்று காட்டி மயக்குகிறார். ஜெயமோகன்களின் எந்த உருவத்தையும் நாம் கண்டறிந்து நாட்டு மக்களுக்குச் சொல்லுவோம் என்பதன் அறிவாயுதத்தின் அடையாளம்தான் ‘இன்றைய காந்தி யார்? என்கிற இந்நூலாகும்.
Be the first to rate this book.