இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்.
Be the first to rate this book.