சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவு, கல்வி ஆகியவற்றுக்கேற்ப, இலக்கிய வடிவம் கொள்கின்றது. பார்க்கப் போனால், தனிமையின் சொர்க்கத்தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காண முயல்வதே இலக்கியம்.
- இந்திரா பார்த்தசாரதி
Be the first to rate this book.