இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி, உண்மையான ஸ்தல சுயாட்சியை அனுபவிப்பவையாகும் இருக்க வேண்டும்.அவர்களுக்குச் சொந்தமான -ஜனநாயகமான - சுயமான அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள சுயாட்சிப் பிரதேசங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். மார்க்கம்,ஏங்கல்ஸ் போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்தனர். ஒடுக்கப்பட்ட நாடுகள் பிரிந்து செல்வதென்பது கூட்டமைப்பை உருவாக்கத்தான். பிரிவினைக்கான நோக்கில் அல்ல. பொருளாதார, அரசியலில் ஒருமித்த கவனம் செலுத்துவதற்குத்தான். அத்தகைய ஒருமித்தத் தன்மை ஜனநாயக அடிப்படையில் அமைய வேண்டுமென்று மார்க்ஸ் நினைத்தார் என்று லெனின் கூறுகிறார்.
Be the first to rate this book.