1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறும், விடுதலைக்கான முன்நிபந்தனைகள் என்னென்ன என்றும் முன்னுரைத்தனர்.
அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைய வேண்டிய தேவை அன்றிருந்த நிலையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள் நுண்ணிய ஆய்வுக் கூறுகளைக் கொண்டவை. இந்நூலில் இடம்பெற்றுள்ள அக்கட்டுரைகள் இந்தியாவின் இன்றைய மானுட விடுதலைக்கும் வழிகாட்டும் வலிமை கொண்டவை.
Be the first to rate this book.