இந்தியாவின் உயர்கல்விமுறை எத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதைப் பல்கலைக் கழகங்கள் தீவிர கவனத்தில் கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என நூலாசிரியர் கருதுகிறார். அவற்றின் நிதி ஆதாரங்கள் சுருங்கிப் போய்விட்டிருப்பது அத்தகைய நெருக்கடிக்குள் குறிப்பிடத் தக்கதாக உள்ளது என்றாலும் அதுவே முற்றிலுமானது எனக் கொள்ளலாகாது. வழி நடத்திச் செல்லும் தலைமை, இருப்பதே அடிப்படையான சிக்கல் ஆகும். நமது மாபெரும் கல்விக் கட்டமைப்பில் தமது பல்கலைக் கழகங்கள் தாம் இழந்த பெருமை மிக்க இருக்கையினை மீட்டெடுக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுணர்வுடன் பாடுபட வேண்டும்.
Be the first to rate this book.