சிதைந்து போனதொரு சிற்பத்தின் சில்லுகளையும் சிதறிக் கிடக்கும் துண்டுகளையும் தேடிக் கொணர்ந்து, அவற்றைச் சிற்பவியல் இலக்கணம் குன்றாமல் இயைபுடன் ஒட்டி இணைத்து, புதியதோர் உயிர்ச் சிலையாக வடித்தெடுக்கும் கடினமான-நுணுக்கமான-கலைப் பணியைப் போன்றதே இந்த ஆய்வு நூலின் படைப்புப் பணியுமாகும். இந்திய நாட்டின் பல வரலாறுகள், மொழி இனங்களின் தோற்ற-வளர்ச்சி-எழுச்சி-தளர்ச்சிகள், அவற்றின் மூலங்கள், ஆட்சியியல் மற்றும் சமூகவியல் அலசல்கள், கால-சூழல்களின் விளைவுகள், தோன்றிய சிக்கல்கள் முதலியவற்றையும்; தமிழகத்தின் தனித்தன்மைகள் இனமூலம், திசை திருப்பங்கள், மொழியின அடையாள நீக்கறவு செய்த அழுத்தங்கள், விழிப்புணர்ச்சிக்கு எதிரான பல தடைகள், வரலாறு தந்த வீழ்ச்சிகள், மொழி, கலை, சமுதாய, வாழ்வியல் மாற்றங்கள், தமிழ்த் தேசியத்தின் படிமுறை மலர்ச்சிகள், தமிழினம் முழுத் தன்னுரிமை பெரும் வழிவகைகள் ஆகியவற்றையெல்லாம் காய்தல், உவத்தல், தற்சார்பு, திரிபு, மயக்கங்களின்றி சென்ற சில ஆண்டுகளாக அரிதின் முயன்று ஆராய்ந்து, அதில் கிடைத்த விரிவான கருத்துப் பரப்பையும், பெற்ற கொண் முடிவுகளையும், தீர்வுகளையும் ஒருங்கிணைத்து இன் கலவையாக்கி வடிவமைத்த என் எழுத்துச் சிற்பமே இப்பெரும் பனுவல்.
- கு. ச. ஆனந்தன்
Be the first to rate this book.