இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது.
முந்த்ரா தொடங்கி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளாக ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை. சவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறது. நகர்வாலா ஊழல், போபர்ஸ், மாட்டுத் தீவன ஊழல், ஹர்ஷத் மேத்தா, சர்க்காரியா கமிஷன், வீராணம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம், வியாபம் என்று இந்தியாவை மூச்சுத் திணற வைத்த ஊழல் வழக்குகள் குறித்த விறுவிறுப்பான அறிமுகத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது.
அரசியல் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கப்போகும் இந்தப் புத்தகம் ஊழல் குறித்த நல்ல விழிப்புணர்வை அளிப்பதோடு அதற்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளிக்கிறது.
Be the first to rate this book.