2500 வருடங்களுக்கு முன்பாக யூதர்கள் இந்தியாவிற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதனை உறுதி செய்யும் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதேபோல கி.பி. 7ம் நூற்றாண்டில் ஏமனிலிருந்து யூத வியாபாரிகள் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்ததாகவும், உள்ளூர் இளவரசர் அவர்களை வரவேற்றதாகவும் அங்கே குடியேறிய ஜோசப் ரபான் என்பவருக்கு அந்த இளவரசர் வழங்கிய தாமிரப் பட்டயத்தை யூத சமுதாயம் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
குஜராத்தில் வசிக்கும் யூதர்களுக்கு கடந்த 2018ம் வருடம் அம்மாநில பா.ஜ.க. அரசு அரசாணை பிறப்பித்து சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது. இந்திய யூதர்கள் பற்றிய ஒரு பார்வையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிடுவதற்காகத்தான் இந்நூல்.
இப்புத்தகத்தில் எந்த விதத் தீர்வோ, முடிவுரையோ அல்லது விமர்சனமோ முன் வைக்கப்படவில்லை. பல்வேறு மொழி, இன, மத, கலாச்சாரங்களை உள்ளடக்கிய பன்மைச் சமூகங்கள் வாழும் பன்முகத் தன்மை கொண்ட இந்திய தேசத்தில் சக சமூகங்களைப் பற்றிய அறிதல் என்ற அடிப்படையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.