வங்காளத்தில் அதுவும் 1930-34 காலகட்டத்தில் வலம்வந்த இளம் போராளிகளை கமலா தாஸ்குப்தா இந்தப் புத்தகத்தின் மூலமாக நம் கண்முன் காட்டுகிறார். வரலாற்றின் பக்கங்களில் வஞ்சிக்கப்பட்ட தியாகிகள் இவர்கள். ஆறே கால் ஆண்டு காலம் சிறையில் இவரும் இவரது தோழிகளும் அனுபவித்த சித்ரவதைக் காட்சிகள், புனைவுகளை மிஞ்சியவை. 'எல்லா மக்களையும் மனிதராக வாழ வைத்தால்தான், பாரதம் உண்மையான விடுதலை பெறும். அன்றுதான் சுதந்திர பாரதத்தின் வெற்றி நிகழும்’ என்ற ஏக்கத்தோடு சுதந்திர இந்தியாவில் வருத்தப்பட்டு வாழ்ந்தவர் கமலா தாஸ்குப்தா. இன்றைய இந்திய நிலைமையோடு இந்தத் தியாகங்களைப் படிக்கும்போதுதான் வேதனை அதிகமாகிறது!
Be the first to rate this book.