அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்னைய இந்தியா, காங்கிரஸின் தொடக்க காலம், ஹிந்து எழுச்சி மறுமலர்ச்சி, அதை தேசியத்தின் ஒற்றை முகமாகக் காட்டும் முயற்சி, ஆர்ய சமாஜ் போன்ற இயக்கங்களின் தோற்றம், திலகர் எனும் மாபெரும் சக்தி, இஸ்லாமிய அரசியல், ஒரு கட்டத்தினரின் கூடா விருப்பத்துக்கு இசைந்து அமைதிப்படுத்தும் ‘கொள்கை’, வெடிகுண்டு அரசியல், கிலாஃபத் இயக்கம் தோற்றதன் விளைவுகள், நாட்டையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் நிகழ்வு, சர் சங்கரன் நாயர், குருதேவர் ரவீந்திநாத் தாகூர் போன்றோரிடம் அது ஏற்படுத்திய தாக்கம், சட்டமறுப்பு மற்றும் ஒத்துழையாமை இயக்கம், காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுகள், தொழிற்சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும், அவை விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த உத்வேகம், தாஷ்கன்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலம், எம்.என்.ராய், சிங்காரவேலர் போன்றோர் பற்றிய துல்லியமான குறிப்பு, பெஷாவர் மற்றும் கான்பூர் சதி வழக்குகளின் பின்னணி, பூரண சுயராஜ்யம் பற்றி லாகூர் காங்கிரஸ் தீர்மானம், உப்பு சத்தியாக்கிரகம், ஸ்வராஜ் கட்சியின் தோற்றம், இடதுசாரி எதிர்ப்பில் காந்தியடிகளின் பங்கு, சமஸ்தானங்களில் வெடித்த விடுதலை இயக்கங்கள், விடுதலைப் போராட்டவெற்றியில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, இன்றைக்கும் கடுமையான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளான ஹரிபுராகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ராஜினாமா அரசியல், நேதாஜியுடன் இடதுசாரிகள் உறவு, இரண்டாவது உலகப்போர், அது விடுதலை இயக்கத்தின்பால் ஏற்படுத்திய தாக்கம், யுத்தமுயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு, மகத்தான 1942 ஆம் ஆண்டு எழுச்சி, ஆகஸ்ட் தீர்மானம், இந்தியத் தேசிய ராணுவத்தின் தோற்றம், வேவல் திட்டம், சிம்லா மாநாடு போன்றவற்றை மிக நுட்பமாக ஆராய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.