2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையை இந்திய மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை திண்ணமாக வெளிப்படுத்துகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது. இந்தியாவின் அடிப்படை நாதம் கூட்டாட்சி தத்துவம் தான். அதை இந்த நாடாளுமன்ற தேர்தலில் அழுத்தமாக உறுதி செய்து இருக்கிறார்கள் இந்திய வாக்காளர்கள். டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக வேலை பார்த்த அனுபவத்தின் வாயிலாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லாயிரம் கிலோமீட்டர் செய்த பயணத்தின் விளைவாகவும், நான் கண்ட, கேட்ட, உணர்ந்த அத்தனை தகவல்களையும் பகுத்தாய்ந்து திரட்டி மக்கள் முன் கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துப் பார்த்து எழுதி தற்போது இதைப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.
இதில் இடம்பெற்றிருக்கும் அத்தனை சம்பவங்களும் உண்மையில் நடந்தவை.
Be the first to rate this book.