பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
ஆய்வுகளையும், நேர்காணல்களையும், நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது.
தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன?
நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு (data analytics), மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்?
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன?
மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன?
இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?
Be the first to rate this book.