ஜனநாயகம் தழைக்கும் தேசம் இந்தியா என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பவை தேர்தல்கள். இங்கே தேர்தல் என்பதை ஆட்சியாளர்களைத் தேடித்தரும் கருவியாகப் பார்க்கக்கூடாது. மாறாக, இந்தியாவில் அரசியல் வளர்ச்சியை, எதிர்காலத்தைத் தீர்மாளிக்கும் வல்லமை பொருந்திய ஆயுதமாகப் பார்க்கவேண்டும். சுதந்திர இந்தியா சந்தித்திருக்கும் அத்தனை பொதுத்தேர்தல்களையும் அதன் சமூக, அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரித்துச் சொல்லும் இந்தப் புத்தகம், இந்தியா என்ற ஜனநாயக தேசம் பரிணாம வளர்ச்சி பெற்ற விதத்தைத் துல்லியமான தரவுகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறது. மக்களவைத்தேர்தலோடு நிறுத்திவிடாமல், நம்முடைய மனத்துக்கு நெருக்கமான தமிழகத் தேர்தலையும் சேர்த்தே விவரிக்கிறது.
Be the first to rate this book.