இந்திய தத்துவங்களுள் நடந்த, நடக்கும் போராட்டத்தை அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக்கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ் சிந்தனை தடத்தை எடுத்துக்கூறுவதோடு அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர் தமிழ் நிலத்தின் பூதவாதத்தில் பதிந்துள்ளதையும் விளக்குகிறது.
இருமைப்படுத்தும் வகைபாடுகள், வாய்ப்பாடுகள் எவற்றினுள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இந்திய தமிழ் மரபுகளின் சிந்தனை வரலாற்றை தேடுவதன் ஊடாக இந்நூல் தம் சொந்த மரபை அதன் இயல்பார்ந்த தருக்கங்களின் வழியாக அறிந்துக்கொள்ள சாத்தியப்படுத்துகிறது.
தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்ட ந. முத்துமோகன் மார்க்சிய மெய்யியலாளர். கிழக்கின் மேற்கின் தத்துவ சொல்லாடல்களை நன்கு உள்வாங்கி தம் சொந்த மரபுகள் பற்றிய காத்திரமான உரையாடல்களை மேற்கொள்பவர். தமிழில் தத்துவார்த்த சொல்லாடல்களுக்கு அவரது மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று இந்நூல்.
Be the first to rate this book.