இந்திய சுதந்திரப் போராட்டம் பல இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களினால் எழுதப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் வரலாறும் முழுவதுமாக சொல்லப்படவில்லை என்றாலும் சிலரின் பங்களிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் தியாகங்கள், அவர்களின் வீர வரலாறுகள் முற்றிலுமாக மறைக்கப்படுகின்றன. இதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள்தான் அலி சகோதரர்கள் என்றழைக்கப்படும் மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி.
என் தோள் மீது இருக்கும் இரு சிங்கங்கள் என்று தேசத்தந்தை காந்தியடிகளால் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்ட அலி சகோதரர்களின் வாழ்க்கையை இந்தியர்கள் அனைவரும் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.
முஸ்லிம்களின் அடையாளங்கள் இடங்களின் பெயர்களிலும் சாலைகளின் பெயர்களிலும் இருக்கக் கூடாது என்று கட்டுக்கடங்காத மதவெறி கொண்ட கும்பல் ஆட்சியில் அமர்ந்து வரலாற்றை மறைப்பதிலும் திரிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இச்சூழலில் அலி சகோதரர்களின் வாழ்க்கையை அறிவது நமது கடமையாகவே இருக்கின்றது.
Be the first to rate this book.