இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டது எப்படி? பரந்து, விரிந்த ஒரு நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் எப்படி சின்னஞ்சிறிய பிரிட்டனால் ஆக்கிரமிக்கவும் அடிமைப்படுத்தவும் முடிந்தது? வர்த்தகம் செய்ய வந்த ஒரு குழு எப்படி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தது? அதை எப்படி அனுமதித்தார்கள் இந்தியர்கள்?
பிரிட்டனின் காலனியாதிக்கத்தால் இந்தியா எப்படியெல்லாம் பாதிக்கப்-பட்டது? எங்கிருந்து முதல் எதிர்ப்பலை கிளம்பியது? மொழி, மதம், சாதி, இனம், பிராந்தியம் என்று பிரிந்துகிடந்த இந்தியர்கள் ஒன்றுபட்டு பிரிட்டனை எதிர்க்கத் தொடங்கியது எப்படி? இந்த ஒருங்கிணைப்பு எப்படிச் சாத்தியமானது? யாரால்?
வாஸ்கோ ட காமா இந்தியாவில் காலடி எடுத்து வைத்த காலகட்டம் தொடங்கி பிரிட்டனின் கொடி இந்திய மண்ணில் இருந்து அகற்றப்பட்ட காலம் வரையிலான நிகழ்வுகளைச் சுவைபட எடுத்துரைக்கும் முக்கியமான வரலாற்று நூல் இது.
வேலூர் புரட்சி, சிப்பாய் எழுச்சி என்று தொடங்கி காந்தி தலைமையிலான மாபெரும் விடுதலைப் போராட்டம் வரை அமைதி வழியிலும் ஆயுதம் தாங்கிய முறையிலும் இந்தியர்கள் முன்னெடுத்த நீண்ட, நெடிய போராட்டத்தின் வரலாறு இதில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 400 தியாகிகள் இந்நூலின் வாயிலாக நமக்கு அறிமுகமாகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றைச் சொல்வதோடு நவீன இந்தியா உருப்பெற்று எழுந்த கதையையும் விவரிக்கும் முக்கியமான நூல் இது. ஒவ்வொரு இந்தியரின் கையிலும் இருக்கவேண்டிய புதையல்!
Be the first to rate this book.