குறு மற்றும் விளிம்பு நிலையிலிருக்கும் விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் இதர சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை காலநிலை மாற்றம் மோசமடையச் செய்யும் - விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் இதர இடுபொருட்களின் உயர்ந்த விலைகள்; குறைந்துவரும் நிலத்தடிநீரின் மட்டம்; தலித்துகள் நிலமற்றிருப்பது; தொழிற்சாலைகள் பொது வளங்களைச் சூறையாடுவது; ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் நில உரிமை மாற்றம்; நிலம் மற்றும் இதர உடைமைகள் பெண்களுக்குச் சொந்தமாக இல்லாதிருத்தல்; நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் விலைவாசிகள், போன்றவையாகும்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியச் சமூகத்திலுள்ள பலதரப்பட்ட சமமின்மைகளால் பாதிக்கப்பட்டும் அவற்றை மோசமடையவும் செய்யும். லட்சக்கணக்கான குறு மற்றும் விளிம்புநிலையிலுள்ள விவசாயிகள், விவசாயக் கூலியாட்கள், ஏழைப் பெண்கள், நகர்ப்புறப் பணியாளர்கள், மற்றும் இதர சமூகக் குழுக்கள், ஆகியோருக்கு காலநிலை மாற்றம் தங்கள் வாழ்வில் விழும் கடைசி அடியாக இருக்கும். புவி வெப்பமடைதலுக்கு மிகக் குறைந்த அளவில் பொறுப்பானவர்கள் அதன் விளைவுகளை அதிக அளவில் சுமப்பதால் மிக மோசமான நீதி மீறல்களில் இது ஒன்றாகும்.
Be the first to rate this book.