‘மார்க்சியம்-லெனினியம்’ நடைமுறைக்கான சித்தாந்தம். சித்தாந்தம் நடைமறைப் படுத்தப்படுகையில், அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பிடப்பட வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்பட்டு மறுஉருவாக்கம் பெறும். அந்த வகையில் ‘மார்க்சியம்-லெனியம்’ ஒரு வளரும் சித்தாந்தம்.
தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சி இயக்கத்தின் சித்தாந்தத் தலைமையாக மட்டுமின்றி நடைமுறையிலும் முன் நின்று வழி நடத்திய முக்கியத் தலைவராக இருந்தார். இந்தியப் புரட்சிப் பாதையைப் பற்றி வேறு எவரையும்விட அதிகமாக எழுதிப் பதிவிட்டு, ஆவணப்படுத்தியவர் தோழர் சுந்தரய்யா என்று துணிந்துக் கூறலாம்.
தோழர் சுந்தரய்யா இந்தியப் புரட்சிப் பாதையின் பல்வேறு அம்சங்களை அனுபவ அடிப்படையில் அலசி ஆவணப்படுத்திய ஒரு டஜன் ஆவணங்களை இந்தத் தொகுப்பில் வழங்குகிறோம். இந்தியப் புரட்சியை நேசித்து, அதற்காக அர்ப்பனிப்புடன் செயல்படுகிற ஊழியர்களுக்கு உதவும் என்கிற நோக்கத்தில்தான் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த ஊழியர்கள் எந்த அமைப்பினராயினும், இந்தியப் புரட்சியை எந்தப் பெயரில் அழைப்பவராயினும், இந்த தொகுப்பில் இடம்பெற்ற ஆவணங்கள் அவர்களின் புரிதலை மேம்படுத்தி இயக்கச் செயல்பாடுகள் சிறப்பாக அமைய உதவும் என்கிற நம்பிக்கையுடன் வழங்ககிறோம்.
1. விசால ஆந்திரத்தில் மக்கள் அரசு
2. முன்னெச்சரிக்கை கைது சட்டத்தைப் பற்றி
3, உள்துறை அமைச்சர் நந்தா அவதூறுக்கு பதில்
4. மொழி பிரச்சனை குறித்து
5. தோழர்களுக்கு கடிதம்
6. இளைஞர்களும் - அரசியலும்
7. கங்கை - காவேரி இணைப்புத் திட்டம்
8. வெகுஜன அமைப்புகள் - கட்சி ஸ்தாபனம்
9. புரட்சிப் பாதையில் மாணவர் இயக்கம்
10. கிராம்ப்புற ஏழைகள் - நில விநியோகம்
11. பொதுச் செயலாளர் மற்றும் அரசியல்
தலைமைக்குழுவிலிருந்து நான் ஏன் ராஜினாமா செய்தேன்
12. இணைப்பு - நடைமுறை உத்தி 1951.
Be the first to rate this book.